Enable Javscript for better performance
நல உதவிகள் வழங்கும் விழா- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் தாமரை அறக்கட்டளை சார்பில் நல உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
     விழாவிற்கு மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் வி.எஸ்.ராகவன் தலைமை வகித்தார். தாமரை அறக்கட்டளைத் தலைவர் பாலாஜி வரவேற்றார்.
     விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயர்வு மைய இயக்குநர் க.கதிரேசன், அறக்கட்டளை இதழை வெளியிட, தாமரை அறக்கட்டளை இயக்குநர் செந்தாமரை சீனுவாசன் பெற்றுக் கொண்டார்.
     விழாவில் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கணினிப் பயிற்சிக்கான ஆணையும், இலவச கணினிப் பயிற்சி முடித்த 50 பேருக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன.
     சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி மையமும், இலவச நூலகமும் தொடங்கி வைக்கப்பட்டன.
     அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தியாகராஜன், ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி ஜி.சுந்தரி, அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் நாராயணன் ஆகியோர் பேசினர்.
     விழாவில் மிட்டவுன் ரோட்டரி நிர்வாகிகள் எஸ்.ஆறுமுகம், என்.பாலசுப்பிரமணியன், என்.ஜெயக்குமார், தில்லை கோவிந்தராஜன், முகமதுநாசர், மோகன், நிர்மலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai