Enable Javscript for better performance
\\\"புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு ஆதரவு\\\'- Dinamani

சுடச்சுட

    

    "புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு ஆதரவு'

    By  கடலூர்,  |   Published on : 27th March 2014 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுக்கும்
     கட்சிக்கே ஓய்வூதியர்களின் ஆதரவு என தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
     இச்சங்கத்தின் கடலூர் வட்ட பேரவைக் கூட்டம் கடலூர் டவுன்ஹாலில் வட்டத் தலைவர் அரங்க.ராமானுஜம் தலைமையிóல் புதன்கிழமை நடைபெற்றது.
     இந்நிகழ்ச்சிக்கு இணைச்செயலர் எஸ்.குமரவேல் வரவேற்றார், மாவட்டச் செயலர் ஆர்.மனோகரன், மாவட்டத் தலைவர் டி.புருஷோத்தமன், அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்க பொருளாளர் எம்.மருதவாணன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் எஸ்.முத்துகுமாரசாமி, மாநிலச் செயலர் ஏ.பக்கிரிசாமி உள்ளிட்டோர் பேசினர்.
     இக் கூட்டத்தில் கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர் கு.பாலசுப்பரமணியன் வாக்கு கேட்டு
     பேசினார்.
     தமிழக அரசுடன் மத்திய அரசு அளித்த 10 சத அகவிலைபடி உயர்வினை உடன் வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி, குடும்பப் பாதுகாப்பு நிதியினை உயர்த்தி வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கே வாக்களிப்போம் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai