Enable Javscript for better performance
பெண்ணிடம் நூதன முறையில் பணம் மோசடி- Dinamani

சுடச்சுட

    

    வேப்பூர் காவல் நிலையம் எதிரில், பெண்ணிடம் நூதன முறையில் பணம் பறித்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே செல்லியம்பாளையத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். வேப்பூர் காவல் நிலையம் எதிரில் மருந்து(மெடிக்கல்) கடை நடத்தி வருகிறார்.
     இவர் செவ்வாய்க்கிழமை காலை, கொளஞ்சியப்பனின் மனைவி சுகன்யா மட்டும் கடையில் இருந்தார். அப்போது பைக்கில் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் இறங்கி வந்து சுகன்யாவிடம், கொளஞ்சியப்பன் ரூ.40 ஆயிரம் தர வேண்டும். பணத்தை தாருங்கள் என கூறினார். சந்தேகம் அடைந்த சுகன்யா, கணவருக்கு போன் செய்ய முயன்றார். உடனே அந்த மர்ம நபர்கள் தங்கள் போனில் கொளஞ்சியப்பனிடம் பேசுவது போல் நடித்தார்.
     இதனால் தன்னிடம் இருந்து பணத்தை எடுத்து எண்ணிக் கொண்டிருந்தார்.
     பணம் குறைவாக இருந்ததால் மீண்டும் கணவரிடம் பேச முயன்றார். ஆனால் அப்போதும் அவரை கணவரிடம் பேச விடாமல் மீண்டும் தங்கள் போனில் இருந்து பேசுவது போல நடித்தார். இருக்கும் பணத்தை வாங்கிச் செல்கிறோம் நாளை வருகிறோம் என பேசி நடித்து சுகன்யாவிடம் இருந்த ரூ.17 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர்.
     பணத்தை கொடுத்த பிறகு, சுகன்யா கணவர் கொளஞ்சியப்பனிடம் போனில் பேசிய போது, யாருக்கும் பணம் தரவேண்டியதில்லை என்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா எதிரே காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai