Enable Javscript for better performance
மனுத்தாக்கலின் போது வேட்பாளருடன்  4 பேருக்கு மட்டுமே அனுமதி - Dinamani

சுடச்சுட

    

    மனுத்தாக்கலின் போது வேட்பாளருடன்  4 பேருக்கு மட்டுமே அனுமதி

    By  கடலூர்,  |   Published on : 27th March 2014 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மனுத் தாக்கலின் போது வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா.கிர்லோஷ்குமார் கூறினார்.
     நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 29-ஆம் தேதி துவங்குகிறது. அதனையொட்டி கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரான ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார், எஸ்பி ஆ.ராதிகா ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தொகுதி தேர்தல் அலுவலர் அறையில் உள்ள இட வசதி, கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வரும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் 100 மீட்டர் சுற்றளவிற்கான எல்லைக்கோடு ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
     இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது: வேட்பு மனுத் தாக்கல் செய்ய வருபவர்கள் 100 மீட்டர் எல்லைக் கோட்டோடு நின்று விட வேண்டும்.
     அதற்கு மேல் மூன்று கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகத்துக்குள் வேட்பாளர் மற்றும் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
     மனு தாக்கலின் போது வரும் அரசியல் கட்சியினரின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றிலும் தடுப்புக் கட்டைகள் கட்டவும், வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நாள்களில் ஆட்சியர் அலுவலக சாலையில் முற்றிலுமாக போக்குவரத்தை தடை செய்திட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
     அதனையொட்டி மனுத் தாக்கல் அன்று இந்த சாலையில் உள்ள நீதிமன்றத்துக்கு வருபவர்கள் பீச் ரோடு, ஜட்ஜ் பங்களா வழியாகவும், செயின்ட் ஜோசப் பள்ளி சாலைக்கு வருபவர்கள் பாரதி சாலை, நேதாஜி சாலை, வடக்கு கவரைத் தெரு வழியாக திருப்பி விடப்படுவார்கள் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai