Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடந்த 4 மாதங்களாக உதவித்தொகை வழங்காததைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை கடலூரில் உள்ள சமூக நலத்திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட்னர்.
     இந்நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்தோஷ் தலைமை வகித்தார். செயலர் பொன்.சண்முகம் பேசினார். நிர்வாகிகள் வெங்கடேசன், பாலமுருகன், விருத்தாசலம் கருப்பையா, நெய்வேலி முத்தையா, குறிஞ்சிப்பாடி அருள்மணி, மகளிரணி நிர்வாகி மஞ்சுளா, இலக்கியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     கடந்த 4 மாதங்களாக மாற்றுத்திறனாளிகள், முதியோர், விதவையர், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு மாதம் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படவில்லை. உதவித்தொகை வழங்கப்படாததால் பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமத்துக்குள்ளகியுள்ளனர்.
     இதனால் அரசு உதவித்தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில் ஏப்ரல் 5-ஆம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.
     போராட்டத்துக்கு பிறகு மாற்றுத்திறனாளிகள், கோரிக்கைகள் அடங்கிய மனுவை சமூக நலத்திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai