Enable Javscript for better performance
10-ஆம் பொதுத் தேர்வு தொடக்கம்:  மாவட்டத்தில் 39 ஆயிரத்து 310 மாணவ, மாணவிகள் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    10-ஆம் பொதுத் தேர்வு தொடக்கம்:  மாவட்டத்தில் 39 ஆயிரத்து 310 மாணவ, மாணவிகள் எழுதினர்

    By  கடலூர்/சிதம்பரம்,  |   Published on : 27th March 2014 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் புதன்கிழமை துவங்கின. கடலூர் மாவட்டத்தில் 39 ஆயிரத்து 310 பேர் பங்கேற்றனர்.
     கடலூர் மாவட்டத்தில், 107 தேர்வு மையங்களில் 39 ஆயிரத்து 310 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். பல்வேறு பள்ளிகளில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
     வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு காலை 9.15 மணிக்கு தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் முன்னதாகவே வந்து விட்டனர். காலை 9.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு 9.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கின.
     கல்வித்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையிலான பறக்கும் படையினர் பல்வேறு தேர்வு மையங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
     கடலூர் மாவட்டத்தில் தேர்வு பணிகளில் 2,150 அறை கண்காணிப்பாளர்கள், 107 முதன்மை கண்காணிப்பாளர்கள், 107 துறை அலுவலர்கள், 214 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளிக்கு இரு ஆசிரியர் கொண்ட நிற்கும் படையினர் அனைத்து அறைகளிலும் தேர்வு கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளை மேற்கொண்டனர்.
     தேர்வு மையங்கள் இல்லாத பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் காலை 7 மணிக்கே பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் தேர்வு எழுதும் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்கு வசதியாக கூடுதல் பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
     9 மையங்களில்...
     சிதம்பரம் நகரில் உள்ள 15 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 9 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.
     இந்த ஆண்டு முதல் தேர்வு காலை 9.15 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது.
     தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் காலை 8.15 மணிக்குள் அந்தந்த தேர்வு மையத்துக்கு வந்தனர்.
     சிதம்பரத்தில் மாணவர்கள் தேர்வு எழுதும் 9 மையங்கள்: அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலை மேல்நிலைப் பள்ளி, ஆறுமுகநாவலர் மேல்நிலைப் பள்ளி, அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai