சுடச்சுட

  

  வாலாஜா ஏரி தூர் வாரும் பணியை, என்எல்சி பொறியாளர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அண்மையில் ஆய்வு செய்தனர்.

  கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வாலாஜா ஏரி, 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1,664 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இந்த ஏரி தூர்ந்து போய் நீர் பிடிப்பு இன்றி பாசனம் இல்லாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

  கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப்சிங்பேடி மூலம், என்எல்சி நிறுவனம் வாலாஜா ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி கொள்ளளவை அதிகரித்துக் கொடுக்க விவசாய சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

  கோரிக்கையை ஏற்று என்எல்சி நிறுவனம் முதல் கட்டமாக ரூ.14 கோடி நிதி அளித்தது. 19.2.2014-ந்தேதி அன்று தற்போதைய மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார், என்எல்சி தலைவர் சுரேந்திர மோகன் மற்றும் நிர்வாக இயக்குநர்கள், பொறியாளர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் தூர்வாரும் பணிகள் தொடங்கின.

  தற்போது ஒப்பந்த அடிப்படையில் ஏரி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. பணியை என்எல்சி பொறியாளர் ராமமூர்த்தி, விவசாய சங்கச் செயலாளர் ராமானுஜம், இணைச் செயலர் பொன்.சண்முகம், சிறப்பு பிரதிநிதி பருதம்பட்டு சாரங்கபாணி, பாதிரிமேடு தவமணி, மருதூர் அப்பானுநாயுடு, கும்மடிமூலை ஊராட்சிமன்றத் தலைவர் நடராஜன், ஜெயங்கொண்டான் ஊராட்சிமன்றத் தலைவர் அறிவழகன், கொத்தவாச்சேரி திருநாவுக்கரசு, கிருஷ்ணமூர்த்தி, ஆலம்பாடி மகாலிங்கம், நத்தமேடு கார்த்திகேயன் உள்ளிட்டோர் பார்வையிட்டு பணியின் நிலை குறித்து ஆய்வு செய்தனர்.

  தூர் வாரும் பணியில் 20-க்கும் மேற்பட்ட நவீன மண் வாரும் இயந்திரங்கள், 80 மண் ஏற்றிச் செல்லும் டிப்பர்கள் ஈடுபடுத்தப்பட்டு, ஏரியின் நான்கு புற எல்லையில் 100 அடி தரை அமைப்பும், 40 அடி மேற்பரப்பும் கொண்ட வலுவான கரை அமைக்கப்படுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai