Enable Javscript for better performance
அண்ணாமலைப் பல்கலை. எஸ்.சி., எஸ்.டி. ஆசிரியர், பணியாளர் நலச் சங்கத்தினர் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    அண்ணாமலைப் பல்கலை. எஸ்.சி., எஸ்.டி. ஆசிரியர், பணியாளர் நலச் சங்கத்தினர் உண்ணாவிரதம்

    By சிதம்பரம்  |   Published on : 17th April 2015 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி. ஆசிரியர் மற்றும் பணியாளர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்திசிலை அருகே வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இட ஒதுக்கீடு, பதவி உயர்வு, அதிகாரப் பகிர்வு, தொகுப்பூதிய ஊழியர்கள் பணி நிரந்தரம், ஓய்வூதியர்களுக்கு பணப்பயன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி. ஆசிரியர் மற்றும் பணியாளர் நலச்சங்கத் தலைவர் எம்.விஜய் தலைமை வகித்தார். துணைச் செயலர் சி.சரவணகாந்தி வரவேற்றார். பொதுச் செயலர் கோ.நீதிவளவன், பொருளாளர் வி.டி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணாவிரதத்தை முன்னாள் எம்.பி.யும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ப.வள்ளல்பெருமான் தொடங்கி வைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசினார்.

    போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலர் திருமார்பன், கடலூர் தெற்கு மாவட்டச் செயலர் வ.க.செல்லப்பன், மேற்கு மாவட்டச் செயலர் பா.தாமரைச்செல்வன், ரா.காவியச்செல்வன், பால.அறவாழி, பெரு.திருவரசு, திராவிடர் கழக பேச்சாளர் யாழ்திலீபன், தமிழ்மாநில காங்கிரஸ் ராதாகிருஷ்ணன், பழங்குடியினர் விடுதலை இயக்கம் சி.வள்ளுவன், மனித உரிமை கட்சி பொதுச்செயலர் எல்.ஆர்.விஸ்வநாதன், பேராசிரியர் கே.ஆர்.ரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai