Enable Javscript for better performance
ஐ.என்.டி.யூ.சி. ஆலோசனை கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்ட ஐ.என்.டி.யூ.சி. கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் களப்பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடந்தது.

    மாவட்ட மாநாடு நடத்துவது தொடர்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஐ.என்.டி.யூ.சி.யின் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா பிரிவுத் தலைவர் இ.பலராமன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார்.

    கூட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மாநாட்டை மே மாதம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலர் கோ.ராஜேந்திரன், பொருளர் ஐ.விமலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai