Enable Javscript for better performance
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கடலூரில் வியாழக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக அறிவித்து அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வுப்பெற்ற ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3,500 வழங்குவதோடு, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    உணவுச்செலவு மானியம் உணவு ஒன்றுக்கு ரூ.5-ம்,  தகுதியானவர்களுக்கு பதவி உயர்வும் அளித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினர்.

    கடலூர் மாவட்டத்தில்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக வியாழக்கிழமை சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.மச்சேந்திரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் டி.புருஷோத்தமன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். கோரிக்கைகளை விளக்கி சங்க மாவட்டச் செயலர் எஸ்.ரெங்கசாமி பேசினார்.

    அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித் துறை மாவட்டச் செயலர் சதீஷ்குமார், உணவுப் பாதுகாப்புத் துறை மாநில பொருளர் டி.ரவிச்சந்திரன், பொதுசுகாதாரத் துறை என்.அரிகிருஷ்ணன், தொழிற்சங்க  கூட்டமைப்பு துணைத்தலைவர் எம்.மருதவாணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai