Enable Javscript for better performance
தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுமானப் பணி ஆட்சியருடன் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுமானப் பணி ஆட்சியருடன் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஆய்வு

    By கடலூர்  |   Published on : 17th April 2015 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுமானப் பணி குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஊரக வளர்ச்சித் துறை செயலர் காணொளிக் காட்சி மூலமாக வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

    கடலூர் மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை காணொளியின் மூலம் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

    கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் மகளிர் திட்டம், புதுவாழ்வு திட்டங்களின் இயக்குநர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், கிராமப் பகுதிகளில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு செயலர்கள் ஆகியோர்களை பயன்படுத்தி தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டுதல், ஊக்கத் தொகை வழங்குதல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்காக மாவட்ட அளவில் பயிற்றுநர்களுக்கு பயிற்சியளித்து, அவர்கள் மூலமாக ஏப்ரல் 20 முதல் 22-ம் தேதி வரை ஊராட்சிமன்றத் தலைவர்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தினர், பணித்தள மேற்பார்வையாளர்கள், சமுதாய கருத்தாளர்கள் ஆகியோர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்று செயலர் கூறினார்.

    மேலும், திடக்கழிவு மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர்களை பயன்படுத்தி திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை செம்மையாகச் செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai