Enable Javscript for better performance
மரத்துக்கு தீ வைப்பு: போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆவினங்குடியில் புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் வியாழக்கிழமை தீ வைத்ததால், அந்த மரம் சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விருத்தாசலம்-திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் ஆவினங்குடி பகுதியில் பொதுப்பணித் துறை மணல் குவாரி உள்ளது.

    குவாரியின் அருகே சாலையோரம் உள்ள ஒரு புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

    தீயில் எரிந்த மரம் சாலையில் விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிலைய அலுவலர் மணி தலைமையில் சென்று தீயை அணைத்தனர். மேலும், 2 பொக்லைன் இந்திரத்தைக் கொண்டு சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். பின்னர் ஆவினங்குடி போலீஸார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்துக்கு தீ வைத்தவர்கள் குறித்து ஆவினங்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai