Enable Javscript for better performance
முறைகேடாக பயன்படுத்திய 6 எரிவாயு உருளைகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    முறைகேடாக பயன்படுத்திய 6 எரிவாயு உருளைகள் பறிமுதல்

    By கடலூர்  |   Published on : 17th April 2015 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 6 எரிவாயு உருளைகளை பறக்கும் படையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

    குடிமைப்பொருள் வழங்கல் சிறப்பு படையின் தனி வட்டாட்சியர் பா.மகேஷ் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் முரளி, கணேசன் ஆகியோர் கடலூர், பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம் பகுதிகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டிய மானிய விலை எரிவாயு உருளைகளை வணிக நோக்கத்துக்காக உணவகங்கள், டீக்கடைகளில் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 6 எரிவாயு உருளைகளை மீட்ட பறக்கும் படையினர், அவற்றை உரிய எரிவாயு முகவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரிக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai