Enable Javscript for better performance
கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில்

    66-வது ஆண்டு குடியரசு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழாவில் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, குடியரசு தின விழா உரையாற்றினார்.

    பின்னர் என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

    பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் 14 பேருக்கு ரூ.1.40 லட்சம் உதவித்தொகையினையும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 7 இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவர்களுக்கு சிறந்த தன்னார்வலர்கள் விருதையும் நிர்வாகி வழங்கினார்.

    கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் வேளாண்புல மாணவர்களின் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 92 கிராமங்களைச் சேர்ந்த சிறந்த மூன்று குழுக்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கி பாராட்டினார்.

    விழாவில் லெப்டினன்ட் கர்னல் சீனுவாசன், பதிவாளர் என்.பஞ்சநதம், இணைப்பதிவாளர் ஹெச்.ரஹ்மத்துல்லாகான், பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அதிகாரி தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ரகுபதி, தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் சந்திரசேகர் மற்றும் புல முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    பள்ளிகள்: ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் பள்ளிச் செயலர் எம்.ஆர்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் ஜி.நடனம் தேசியக் கொடி ஏற்றினார்.

    வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் எஸ்.சுந்தரவடிவேல் தேசிய கொடி ஏற்றிவைத்து உரையாற்றினார்.

    வயலூர் காமராஜ் மெட்ரிக் சிறப்பு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தினவிழா தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

    பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் எம்.யுகேஸ்வரன் தேசியக் கொடி ஏற்றினார்.

    ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் நிர்வாகி ரத்தின.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற விழாவில் ஓய்வுபெற்ற பேராசிரியர் எம்.நடராஜன் தேசியக்கொடி ஏற்றினார்.

    அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்குழுச் செயலர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அண்ணாமலைப் பல்கலை. ஆட்சிமன்றக்குழு முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் த.ராஜவன்னியன் தேசியக்கொடி ஏற்றினார்.

    காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஆர்.கே. இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி தலைவர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் தேசியக்கொடி ஏற்றினார்.

    பண்ருட்டி

    பேர்பெரியான்குப்பம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    காடாம்புலியூர் ராஜகுரு மெட்ரிக் பள்ளியில் தாளாளர் குருநாதன் தலைமையில், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் தமிழறியும்பெருமாள் தேசியக் கொடியை ஏற்றினார்.

    பூங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊராட்சிமன்றத் தலைவர் பி.எம்.பாலு தலைமையில், பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் சி.கிருஷ்ணமூர்த்தி தேசியக்கொடி ஏற்றினார். மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளியில் ஊராட்சிமன்றத் தலைவர் ஏ.ராமதாஸ் தேசியக் கொடியை ஏற்றினார்.

    பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில் தாளாளர் வீரதாஸ் தேசியக்கொடி ஏற்றினார்.

    பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளர் சக்திவேல் கொடி ஏற்றினார்.

    திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் வி.ஹரிமூர்த்தி தேசியக் கொடி ஏற்றினார்.

    காட்டுக்கூடலூர் கனி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் தாளாளர் சஞ்சீவிராயர் தேசியக் கொடி ஏற்றினார். நேஷனல் கல்வியியல் கல்லூரியில், கல்லூரி இயக்குநர் சந்திரசேகர் தேசியக் கொடி

    ஏற்றினார்.

    விருத்தாசலம்

    விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஸ்ரீ சாந்தி ஜெயின் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி குடியரசு தின விழாவில், பள்ளி நிர்வாகி ரமேஷ்சந்த் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

    பெண்ணாடம் உண்டு உறைவிடப் பள்ளியில், பள்ளிச் செயலர் லெனின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    பெரியகண்டியங்குப்பத்தில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில், நகர்மன்ற உறுப்பினர் கே.ஏ.ராஜ்குமார் தேசியக் கொடியை ஏற்றிவைத்து வைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai