Enable Javscript for better performance
திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் குடமுழுக்கு- Dinamani

சுடச்சுட

    

    திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் குடமுழுக்கு

    By கடலூர்  |   Published on : 27th January 2015 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்ட இந்தத் திருத்தலம் பல புராண வரலாற்று சிறப்பு கொண்டது. ராவணனை வதம் செய்த பிறகு ராமபிரான் வழிபட்டதாகவும், கண்பார்வை இழந்த குலோத்துங்க சோழன் இங்கு வழிப்பட்டு கண்பார்வை பெற்றதாகவும், நேபாள மன்னன் மகேந்திரன் வழிப்பட்டு பேறு பெற்றதாகவும் தல வரலாறு கூறுகிறது.

    இக்கோயில் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா கடந்த ஜனவரி 22-ம் தேதி காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    23-ம் தேதி சாந்தி ஹோமம், மருந்து சாத்துதல், முதற்கால யாகசாலை பூஜையும், 24-ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜையும், ஜன.25-ம் தேதி 4-ம், 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன திங்கள்கிழமை (ஜன.26) காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. காலை 7.15 மணி முதல் பரிவார மற்றும் பிரதான யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடந்தன.

    மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க புண்ணிய தீர்த்தம் கோயிலை வலம் வந்தது.

    பின்னர், மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவகாம பாடசாலை முதல்வர் சிவஸ்ரீ ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் கோயில் சிவாச்சாரியர்கள் சிவஸ்ரீ தண்டபாணி குருக்கள், சிவஸ்ரீ திருஞானசம்பந்த குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க 9.40 மணிக்கு விமானம், ராஜகோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா குடமுழுக்கை நடத்தினர்.

    தொடர்ந்து 10 மணிக்கு மூலஸ்தானத்துக்கு குடமுழுக்கு நடத்தி வைக்கப்பட்டது.

    பின்னர், வைத்தியநாத சுவாமிக்கும், அசனாம்பிகை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமும், மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 5.30 மணிக்கு வைத்தியநாத சுவாமிக்கு மகாஅபிஷேகம், சாயரட்சை பூஜை, தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டு சுவாமிகள் திருவீதி உலா புறப்பட்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை குடமுழுக்கு விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai