Enable Javscript for better performance
நடராஜர் கோயில் பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    நடராஜர் கோயில் பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம்

    By சிதம்பரம்  |   Published on : 27th January 2015 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்ரம் நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ மூர்த்தியின் பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு, திங்கள்கிழமை காலை 10 மணிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஜன.23-ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி ஜன.25 இரவு வரை நடைபெற்றன.

    ஜன.26-ம் தேதி திங்கள்கிழமை காலை கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று பின்னர் காலை 10 மணிக்கு அனைத்து பரிவார சன்னதிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சி நடைபெற்றது.

    கும்பாபிஷேகம் நடைபெற்ற பரிவார சன்னதிகள்: அனுக்ஞை விநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர், லிங்கோத்பவர், ஆகாசலிங்கம், ஸ்ரீ பிட்சாண்டவர், ஸ்ரீ ஜைமினி, சூர்ய சந்திரர்கள்,கால பைரவர், ஸ்ரீ ப்ரஹ்ம சண்டிகேஸ்வரர். இதற்கடுத்த பிரகாரத்தில் உள்ள தெய்வங்கள்: ஊர்த்வ தாண்டவர், அன்னபூரணி, கால ஸம்ஹார மூர்த்தி, பால தண்டாயுதபாணி, ஸ்ரீ சரபேஸ்வரர், ஸ்ரீ தாயுமானவ ஸ்வாமி, ஸ்ரீ திருமுறை காட்டிய விநாயகர், ஸ்ரீ சமயாச்சாரியார், சந்தானாச்சாரியார், திருமுறை கோயில்: அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகியோர் அருள்பதி கொண்ட சன்னதி, இதற்கடுத்த பிரகாரத்தில் அமைந்த ஆயிரங்கால் மண்டபத்துக்கு அருகில் உள்ள விட்டவாசல் பைரவர், கோபுர விநாயகர், ஸ்ரீ தியாகவல்லி ஸமேத ஸ்ரீ தியாகராஜர்.

    மே1ல் ஸ்ரீநடராஜபெருமானுக்கு மகாகும்பாபிஷேகம்:

    வருகிற மே1-ம் தேதி அன்று சிதம்பரத்தின் பொன்னம்பலத்தில் அனுதினமும் நடனமிடும் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கும், நான்கு கோபுரங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai