Enable Javscript for better performance
பெண்கள் பள்ளி அடிக்கல் நாட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    விருத்தாசலம் அடுத்த எருமனூரில் திருமுதுகுன்றம் கல்வி அறக்கட்டளை சார்பில், விருதை வித்யாலயா பெண்கள் பள்ளி அடிக்கல்நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    இவ் அறக்கட்டளை சார்பில், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில், பெண்களுக்கு முதன்முறையாக, விருதை வித்யாலயா பெண்கள் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி தொடங்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, விருத்தாசலம் அடுத்த எருமனூரில் நடைபெற்றது.

    இதில், விருத்தாசலம் நகர்மன்றத் தலைவர் ப. அருளழகன், செந்தில்முருகன் கல்வி அறக்கட்டளைத் தலைவர் வி.செந்தில்குமார், மாடர்ன் கல்வி நிறுவனங்கள் தலைவர் ஜெ.ஜாபர்அலி, ஆதிபராசக்தி மற்றும் வள்ளலார் கல்வி நிறுவனத் தலைவர் பி.ராஜேந்திரன், ஜி.மதியழகன், வழக்குரைஞர்கள் எம்.கே.விஜயகுமார், எம்.கே.அருள்குமார், சி.என்.சி.கார்த்திக், என்.முருகன், ஏ.அன்பழகன், ஜி.முருகன், அன்னை மாதா கல்வி நிறுவனத் தாளாளர் எஸ்.ராஜவெங்கடேசன், விருத்தாம்பிகை மற்றும் செந்தில்முருகன் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் பி.எஸ்.கே.செல்வகுமார், மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai