Enable Javscript for better performance
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர், பண்ருட்டி, விருத்தாசலத்தில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட திமுக சார்பில் கடலூர் திருப்பாதிரிபுலியூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் பி.நாராயணன், பொருளர் எஸ்.சலீம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், மொழிக்காக, இனத்துக்காக, கொள்கைக்காக உயிரை விட்டார்கள் அன்று. அதேபோல இந்த நாட்டை காக்க இளைஞர்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று பணத்துக்குத்தான் ஓட்டு. உணர்வுக்காக ஓட்டு அல்ல என்ற நிலை உருவாகி இருக்கிறது.

    தி.மு.க. ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்து கலைஞர் உத்தரவிட்டார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பயிர்கள் விளைச்சல் இல்லை. பூச்சிகளின் தாக்கம் உள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள் என்றார்.

    கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் கோ.வி.செழியன், தலைமை கழக பேச்சாளர் ராமகிருஷ்ணன் பேசினர்.

    நகர செயலர் கே.எஸ்.ராஜா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பண்ருட்டி

    பண்ருட்டியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    நகரச் செயலர் கே.ராஜேந்திரன் வரவேற்றார். நகர அவைத் தலைவர் எம்.பச்சையப்பன், மாவட்ட துணைச் செயலர்கள் தணிகைசெல்வம், ஆனந்தி, தலைமை பொதுக்குழு நா.பலராமன் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக பேச்சாளர்கள் கோடையிடி குற்றாலம், கிருஷ்ணகிரி சாய்குமார் சிறப்புரையாற்றினர். நெல்லிக்குப்பம் நகரச் செயலர் மணிவண்ணன், நகர நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் திரளாக பங்கேற்றனர்.

    விருத்தாசலம்

    விருத்தாசலம் வானொலித் திடலில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், நகர முன்னாள் பொருளாளர் கதிரவன் வரவேற்றார்.

    நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.

    மாவட்ட துணைச் செயலர் பாலகிருஷ்ணன், நகர முன்னாள் அவைத் தலைவர் அபுபக்கர், பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர் மேற்கு மாவட்டச் செயலர் சி.வெ.கணேசன், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் கோவை சிராஜூதீன், ஒரத்தநாடு நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முன்னதாக, மொழிப்போரில் உயிர்நீத்த சின்னச்சாமியின் மனைவி கமலாம்பாள், மகள் திராவிடச்செல்வி ஆகியோருக்கு மாவட்டச் செயலர் கணேசன் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். கூட்டத்தில் ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai