Enable Javscript for better performance
அடையாளம் தெரியாத மூதாட்டி சாவு- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெயர், முகவரி தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
     பண்ருட்டி தீயணைப்பு நிலையம் அருகே சாலை ஓரம் கிடந்த மூதாட்டியை, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடந்த வாரம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவர் யார் எந்த ஊர் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இதுகுறித்து, பண்ருட்டி காவல் ஆய்வாளர் சிவசுப்பு விசாரித்து வருகிறார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai