Enable Javscript for better performance
இலவச வேட்டி, சேலை திருட்டு:  அலுவலக உதவியாளர் தாற்காலிக பணிநீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    இலவச வேட்டி, சேலை திருட்டு:  அலுவலக உதவியாளர் தாற்காலிக பணிநீக்கம்

    By  சிதம்பரம்,  |   Published on : 28th January 2015 12:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் இலவச வேட்டி, சேலை திருடு போனது தொடர்பாக, வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
     சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் சமீபத்தில் 100 சேலைகள் கொண்ட இலவச வேட்டி, சேலை பண்டல் ஒன்று குடோனிலிருந்து திருடு போனது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதன் சிதம்பரம் நகர குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
     விசாரணையில் சேலைகள் கடத்திய வாகனத்தின் உதவியால் திருடியவர்கள் யார் எனத் தெரியவந்தது.
     சிதம்பரம் காயத்திரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார், காரைக்காட்டு சொக்கலிங்கம் தெருவைச் சேர்ந்த அறிவழகன் ஆகியோர் சேலைகளை திருடியதும், இதற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றும் சுசிராஜ் (45) என்பவர் உதவியாக இருந்ததும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
     இந்த வழக்கில் போலீஸார் சந்தோஷ்குமாரை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே, சிதம்பரம் வட்டாட்சியர் பரிந்துரையின் பேரில் அலுவலக உதவியாளர் சுசிராஜை தாற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai