Enable Javscript for better performance
உலகத் திறனாளர்களைக் கண்டறியும் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    விருத்தாசலத்தில் உலகத் திறனாளர்களை கண்டறிவதற்கான விளையாட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், உலகத் திறனாளர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதற்கான விளையாட்டுப் போட்டி, விருத்தாசலம் சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
     இதில், விருத்தாசலம் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட 6,7 மற்றும் 8-ம் வகுப்புகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
     இவர்களுக்கு, ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் போட்டிகள் நடைபெற்றன.
     போட்டியை கோட்டாட்சியர் ப.மு.செந்தில்குமார் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
     விளையாட்டு மைய பொறுப்பாளர் அறிவழகன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai