Enable Javscript for better performance
ஊரக வேலைத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்:  காங்கிரஸார் வலியுறுத்தல் - Dinamani

சுடச்சுட

    

    ஊரக வேலைத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்:  காங்கிரஸார் வலியுறுத்தல்

    By  கடலூர்,  |   Published on : 28th January 2015 12:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தி, கடலூரில் காங்கிரஸார் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
     தற்போது இத்திட்டம் குறிப்பிட்ட மாவட்டங்களில், பின்தங்கிய ஒன்றியங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வலியுறுத்தி, கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் ஆர்.செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து பேசுகையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இத்திட்டத்துக்காக 2014-2015-ம் நிதியாண்டில் ரூ.33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. செப்டம்பர் 2014 வரை இத்திட்டத்துக்காக பாஜக அரசு ரூ.17ஆயிரம் கோடி செலவிட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ.12 ஆயிரம் கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
     இத்திட்டத்துக்கான ஆண்டு செலவு ரூ.33 ஆயிரம் கோடியை ஒதுக்கத் தயங்கும் பாஜக அரசு, பெருநிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கருதி, ரூ.6 லட்சம் கோடி கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
     ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ஆர்.ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் ஏ.சேஷாத்திரி (வடக்கு), கே.பழனிசாமி (தெற்கு), ஏ.காமராஜ் (மேற்கு), நகரச் செயலர் ஆர்.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai