Enable Javscript for better performance
கண், உடல் தானம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் அருகே உள்ள கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த எம்.ராதாகிருஷ்ணன் பிள்ளை திங்கள்கிழமை காலமானார்.
     இவரது கண்கள் மற்றும் உடல் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் மற்றும் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டது. கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடல் மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், அரிமா சங்கத் தலைவர் ஜே.திருமால், செயலாளர் பி.எஸ்.சரவணன், பொருளாளர் ஏ.விவேகன், அரிமா மாவட்டத் தலைவர் செந்தில்வேலன், வட்டாரத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai