Enable Javscript for better performance
கோயில் குடமுழுக்கு விழாவில்  24 பெண்களிடம் 120 பவுன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கோயில் குடமுழுக்கு விழாவில்  24 பெண்களிடம் 120 பவுன் நகை திருட்டு

    By  கடலூர்,  |   Published on : 28th January 2015 12:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திட்டக்குடியில் திங்கள்கிழமை நடந்த கோயில் குடமுழுக்கு விழாவில் 24 பெண்களிடம் 120 பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     திட்டக்குடியில் உள்ள அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடந்தது. விழாவை காண்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
     இதில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி 24 பெண்களிடமிருந்து சுமார் 120 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. நகைகளை பறிகொடுத்த பெண்கள் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். திருட்டு குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     இந்நிலையில், குடமுழுக்கின் போது சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த ரா.கொடியரசி (50) கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்ற ஒரு பெண்ணை அவர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். அந்தப் பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதால் விரைவில் குற்றவாளிகள் அனைவரும் பிடுபடுவார்கள் என்று தெரிகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai