Enable Javscript for better performance
டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்:  கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

    டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்:  கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்

    By  பண்ருட்டி  |   Published on : 28th January 2015 12:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வடக்குத்து ஊராட்சியில் திங்கள்கிழமை நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
     கூட்டத்துக்கு வடக்குத்து ஊராட்சி மன்றத் தலைவர் கோ.ஜெகன் தலைமை வகித்தார். மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார்.
     துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், ஊராட்சிச் செயலர் மத்தியராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
     கூட்டத்தில், வடக்குத்து ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலையில் உச்ச நீதிமன்றத்தின் ஆணையையும் மீறி டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதன் மீதான தொடர் நடவடிக்கை எடுக்க ஊராட்சித் தலைவருக்கு முழு ஒப்புதல் அளிப்பது, கர்ப்பிணிகளுக்கு பயன்படும் வகையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     மருங்கூரில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் ஏ.ராமதாஸ் தலைமை வகித்தார். ஊர் நல அலுவலர் லட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சிச் செயலர் சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்ட
     னர்.
     கூட்டத்தில், கிராம வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது, இந்திரா நினைவு குடியிருப்பு, பசுமை வீடு பயனாளிகள் தேர்வு, டெங்கு தடுப்பு, 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai