Enable Javscript for better performance
தனியார் கல்லூரி மாணவிகள்  உள்ளிருப்புப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் கல்லூரி மாணவிகள்  உள்ளிருப்புப் போராட்டம்

    By  கடலூர்,  |   Published on : 28th January 2015 11:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூரில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் கல்லூரிபேராசிரியை பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இக்கல்லூரி போராசிரியை பி.சாந்தி கடந்த நவம்பர் 2014-ம் ஆண்டு வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதனைக் கண்டித்தும், அறக்கட்டளையை அரசே ஏற்ற நடத்த வலியுறுத்தியும் கல்லூரி மாணவிகள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
     அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலையில் மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து 24 மணி நேரம் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
     அதன்படி, வகுப்பு நேரம் முடிந்தும் மாணவிகள் கல்லூரியை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து வகுப்பிலேயே இருந்து வருகின்றனர். மாணவிகளிடம் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai