Enable Javscript for better performance
திட்டக்குடியில் மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திட்டக்குடியில் மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் சாவு

    By  கடலூர்,  |   Published on : 28th January 2015 12:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திட்டக்குடியில் மர்ம விலங்கு கடித்ததில் செவ்வாய்க்கிழமை 6 ஆடுகள் உயிரிழந்தன.
     கடலூர் மாவட்டம், திட்டக்குடி ஆற்றுப் பாதையைச் சேர்ந்த விவசாயியான பழனி (62) ஆடுகள் வளர்த்து வருகிறார். செவ்வாய்க்கிழமை காலையில் வெள்ளாற்றின் கரையோரம் ஆடுகளை அடைத்துள்ள பட்டிக்குச் சென்றபோது 15 ஆடுகளில் 6 ஆடுகள் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தன. இதனால் திடுக்கிட்ட பழனி அதே பகுதியில் உள்ள அவரது உறவினர்களுக்கும், வருவாய்த் துறை மற்றும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.
     தகவலின் பேரில் வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.
     ஆடுகளை அதே பகுதிகளில் சுற்றித் திரியும் வெறிநாய்கள் கடித்தனவா அல்லது அருகில் வெள்ளாற்றுப் பகுதியில் உள்ள வயல் பகுதிகளில் திரியும் நரிகள் கடித்தனவா என வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
     இறந்துபோன ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.40 ஆயிரம் ஆகும். எனவே, விவசாயி பழனிக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திட்டக்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai