Enable Javscript for better performance
தி.க. விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் திராவிடர் கழகம் சார்பில் விழிப்புணர்வு வட்டார மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் கடலூர் புதுப்பாளையத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
     மாவட்டத் தலைவர் தென்.சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் நா.தாமோதரன், அமைப்பாளர் சி.மணிவேல் முன்னிலை வகித்தனர்.
     மாநில பொதுச்செயலர் துரை.சந்திரசேகரன், திமுக மாணவரணி மாநிலச் செயலர் இள.புகழேந்தி, அதிரடி க.அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்புச் செயலர் பூ.சி.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் ப.தாமரைச்செல்வன், தமிழ்ச் சங்க மாவட்டச் செயலர் இராச.குழந்தைவேலனார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுப் பேசினர்.
     இதில், புதுவை கே.குமாரின் மந்திரமா, தந்திரமா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், திராவிடர் விழிப்புணர்வு மாநாடு தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.
     நிர்வாகிகள் நா.உதயசங்கர், சொ.தண்டபாணி, புலவர் சு.ராவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரத் தலைவர் க.எழிலேந்தி வரவேற்க, நகரச் செயலர் இரா.சின்னதுரை நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai