Enable Javscript for better performance
தூய்மை கடலூர் இயக்க  விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    தூய்மை கடலூர் இயக்க விழிப்புணர்வுப் பேரணி கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு அமைப்புகள் சார்பில் தூய்மை கடலூர் இயக்கம் அண்மையில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் முதல்கட்டமாக நகராட்சி 17-வது வார்டில் தூய்மைப் பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
     அதன்படி, கடலூர் வண்ணாரப்பாளையத்தில் பேரணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மருத்துவர் கே.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான பேரணியை நகராட்சி ஆணையாளர் ரா.முருகேசன் தொடங்கி வைத்தார்.
     பேரணி 17-வது வார்டு முழுவதும் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து நகராட்சி துப்புரவுப் பணியாளர்களிடம் வழங்குவது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
     பேரணியில் திருப்பாதிரிபுலியூர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி, விவேகானந்தா பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மு.சக்திகணபதி, வி.நாராயணன், டி.முரளி, ஜெ.ஜெயபிரகாஷ், வைகை துரைதேவன், மருத்துவர் வி.கே.கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai