Enable Javscript for better performance
நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு: புகார் தெரிவிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு: புகார் தெரிவிக்கலாம்

    By  கடலூர்,  |   Published on : 28th January 2015 11:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெற்றால் அதனை புகாராக தெரிவிக்கலாம் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.
     இதுகுறித்து, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கடலூர் மண்டல மேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     கடலூர் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. அறுவடையாகும் நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய, மாவட்டம் முழுவதும் 148 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
     இந்த கொள்முதல் நிலையங்களில் பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முதல் ரக நெல் குவிண்டால் ரூ.1,470-க்கும், பொதுரகம் ரூ.1,410-க்கும் வாங்கப்படுகிறது.
     விவசாயிகள், கொள்முதல் நிலையங்களில் நெல் எடை கூடுதலாகவோ அல்லது விவசாயிகளிடம் மூட்டைக்கு பணம் பெறுவதாகவோ அல்லது வேறு ஏதேனும் புகார்கள் இருந்தாலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
     அதற்காக, 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தொலைபேசி எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
     எனவே, கடலூர் மண்டல அலுவலகத்தை 04142-221623, மண்டல மேலாளரை அலைபேசியில் 94421 30630 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
     சிதம்பரம் துணை மேலாளர் (கொள்முதல் மற்றும் இயக்கம்) 04144-238280, 98433 81259 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai