Enable Javscript for better performance
படகு கவிழ்ந்து மீனவர் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
     கடலூர் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் ஆறுமுகம் (35). இவரது தம்பி சக்திவேல் மற்றும் சிலர் மீன் பிடிப்பதற்காக படகில் செவ்வாய்க்கிழமை கடலுக்குள் சென்றனர். திடீரென பக்கிரிசாமி இறந்ததையடுத்து மீனவர்கள் சந்தானம், பாலு, ரவீந்திரன் ஆகியோர் மற்றொரு படகில் கடலுக்குள் சென்று ஆறுமுகத்தையும் சக்திவேலையும் அழைத்து வரச்சென்றனர்.
     அதன்படி, 5 பேரும் ஒரு படகில் கரை திரும்பிய போது படகு கடலூர் துறைமுகம் முகத்துவாரத்தின் அருகே திடீரென கவிழ்ந்தது. இதில், ஆறுமுகத்தைத் தவிர மற்றவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். ஆறுமுகத்தை காணாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் படகுகளில் சென்று அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai