Enable Javscript for better performance
பார்த்தீனியம் செடியை  அழிக்க வேண்டும்:  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பார்த்தீனியம் செடியை  அழிக்க வேண்டும்:  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    By  பண்ருட்டி  |   Published on : 28th January 2015 11:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் வளர்ந்து வரும் பார்த்தீனியம் செடிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     வயல்வெளி, சாலை ஓரம், குடியிருப்பு, ஏரி, குளம் மற்றும் பொது இடங்களில் பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ளன. இவை மனித இனத்துக்கும், கால்நடைகளுக்கு மட்டுமன்றி விவசாயத்துக்கும் கேடு விளைவிக்கும் நச்சுத்தன்மை கொண்டது.
     இந்த பார்த்தீனியம் செடிகளை அழிக்க வேண்டும் எனவும், இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் எனவும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
     இதையடுத்து, மாவட்டம் தோறும் பார்த்தீனியம் செடி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் தொடங்கிய இப்பணி சிறிது காலத்திலேயே முடங்கிப் போய்விட்டது.
     மனிதனுக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா நோய்களையும், செடிகளை சாப்பிடும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், சளி, கழிச்சல் நோய்களையும் ஏற்படுத்தும் விஷத் தன்மை கொண்ட இச்செடி, தற்போது மாவட்டத்தில் பண்ருட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வளர்ந்துள்ளன. பண்ருட்டி அடுத்துள்ள பக்கிரிப்பாளையத்தில் பார்த்தீனியம் செடியை சாப்பிட்ட சில கால்நடைகள் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
     எனவே, நச்சுத் தன்மை மிக்க பார்த்தீனியம் செடியை அழிக்கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மீண்டும் தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai