Enable Javscript for better performance
மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு:  தேமுதிக குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு:  தேமுதிக குற்றச்சாட்டு

    By  பண்ருட்டி,  |   Published on : 28th January 2015 11:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென்பெண்ணையாற்றில் மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவை எதிர்க்கட்சிக் கொறடா வி.சி.சந்திரகுமார் குற்றஞ்சாட்டினார்.
     பண்ருட்டி அரசு மருத்துவமனையின் அவலநிலை, தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுப்பதை நிறுத்தி தடுப்பணை கட்டவும், பண்ருட்டியில் ஐயூடிஎம் திட்டத்தில் போடப்பட்ட போர் இயங்காததையும், அதில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும் தேமுதிக சார்பில் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த பண்ருட்டி எம்எல்ஏ., சிவக்கொழுந்து, அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை, வறுமையில் உள்ளவர்களுக்கு தானே, பசுமை வீடுகள் வழங்கப்படவில்லை, சுகாதாரம் சுற்றுச்சூழல் நீர் நிலைகளை மாசடையச் செய்யும் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து விரைவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
     கண்டன உரை நிகழ்த்திய சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடா வி.சி.சந்திரகுமார், தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி நகரில் ரூ.5 கோடி செலவில் போடப்பட்ட குடிநீர் திட்டம் செயலிழந்துவிட்டது என்றார்.
     மாவட்ட இளைஞரணிச் செயலர் கே.கலியபெருமாள், மாணவரணிச் செயலர் எஸ்.வசந்தன், நகரப் பொருளர் சி.பாக்கியராஜ், அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் தென்னரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai