Enable Javscript for better performance
மாணவர்களுக்கு திறன் ஊக்குவிப்பு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களுக்கு திறன் ஊக்குவிப்பு பயிற்சி

    By  விழுப்புரம்,  |   Published on : 28th January 2015 12:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்களுக்கான திறன் ஊக்குவிப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     இப் பயிற்சிக்கு விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ.சந்திரசேகரன் தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் என்.சண்முகம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
     மயிலம் பொறியியல் கல்லூரி முதல்வர் எஸ்.செந்தில், பி.என்.தோப்பு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வி.கெüரி, கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ.மார்கிரட் கஸ்தூரிபாய் உள்பட பலர் பங்கேற்றனர். இப் பயிற்சியில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
     இவர்களுக்கு, தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது, தேர்வு நேரத்தில் பதற்றத்தை தவிர்க்கும் முறை, திட்டமிட்டு பாடங்களை படிப்பது, தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை அளிப்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தேர்வு நேரத்தில் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கவும், அதிலிருந்து விடுபடும் முறை குறித்தும் விளக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai