Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     மாவட்ட மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
     சங்கத்தின் சிறப்புத் தலைவர் தி.ச.திருமார்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலர் பி.ராஜன்பாபு வரவேற்றார்.
     ஏஐடியுசி மாவட்டச் செயலர் எம்.சேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்தியல் பரப்பு மாநிலச் செயலர் சு.திருமாறன், அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன், இணை ஒருங்கிணைப்பாளர் சி.குமார், சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் தி.அருள்செல்வம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
     மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டை அரசு மற்றும் தனியார் துறைகளில் முழுமையாக அமல்படுத்த வேண்டும். வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகையை மீண்டும் வழங்கிட நடவடிக்கை, கடலூரில் செயல்பட்டு வரும் அரசு காது கேளாதோர் பள்ளிக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய நிரந்தர கட்டடம், மாநில அரசால் வழங்கப்பட்டு வரும் விலையில்லா ஆடு, மாடுகள் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
     நிறைவில் செயற்குழு உறுப்பினர் கே.புவனேஸ்வரி நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai