Enable Javscript for better performance
மாவட்டத்தில் குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் திங்கள்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
     கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நடந்த விழாவில் கல்லூரி முதல்வர் (பொ) ந.கண்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
     கடலூர் துறைமுகம் மீனவர் அங்காடியில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பேரவைத் தலைவர் எம்.சுப்புராயன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். மகளிர் பேரவைத் தலைவி ஆர்.கோவிந்தம்மாள், துணைத் தலைவி கே.அன்னபூரணி, மாவட்டச் செயலர் எஸ்.பாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் வட்டாட்சியர் தேவநாதன் தேசியக்கொடி ஏற்றினார். விழாவில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரத்தினாவதி, மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர்கள் கிருஷ்ணதாஸ், சிவகங்கை, எழில்வளவன், தமிழ்செல்வி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
     திட்டக்குடி மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி உத்தமராஜ் கொடி ஏற்றி வைத்தார். இதில் வழக்குரைஞர்கள் பழனியாண்டி, சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
     திட்டக்குடி பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் நீதிமன்னன், பெண்ணாடம் பேரூராட்சியில் பேரூராட்சி மன்றத் தலைவர் மதியழகன், மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுத் தலைவர் கந்தசாமி, நல்லூரில் ஒன்றிய குழு தலைவர் ராஜலட்சுமி ராஜேந்திரன் கொடி ஏற்றினர்.
     திட்டக்குடியில் பாஜக ஒன்றியத் தலைவர் பொன்.பெரியசாமி கொடி ஏற்றினார். தொளார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பாரதிசுரேஷ், நல்லூர் வட்டாரத் தலைமை மருத்துவமனையில் மருத்துவர் வலம்புரிசெல்வன், மங்களூர் வட்டார தலைமை மருத்துவமனையில் மருத்துவர் மகேஸ்வரி கொடி ஏற்றி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai