Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரத்தில் துணி காயவைக்கும் போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார்.
     திட்டக்குடி தாலுகா எறையூர் காமராஜ் நகரைச் சேர்ந்த சக்திவேல் மனைவி ஆனந்தவல்லி (25). இவர், சிதம்பரம் சி.தண்டேஸ்வரநல்லூரில் உள்ள அவரது பெரியப்பா கிருஷ்ணன் இறந்துவிட்டதால், துக்க நிகழ்ச்சிக்கு வந்து தங்கியுள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ஆனந்தவள்ளி குளித்துவிட்டு அருகாமையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டு மாடியில் துணிகளை காய வைத்துள்ளார். அப்போது அருகே சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து ஆனந்தவல்லி உயிரிழந்தார்.
     இதுகுறித்து, சிதம்பரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனந்தவல்லிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. 2 மகன்கள் உள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai