Enable Javscript for better performance
மூப்பனார் பேரவை வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் நகருக்கு புதன்கிழமை வரும் ஜி.கே.வாசனை, சிதம்பரத்திலிருந்து மூப்பனார் பேரவையினர் சுமார் 35 வாகனங்களில் சென்று வரவேற்க உள்ளனர்.
     மாவட்டத்தில் தமாகா உறுப்பினர் சேர்க்கை குறித்து, கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, சிதம்பரம் மேலவீதியில் மூப்பனார் பேரவை சார்பில் நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடை
     பெற்றது.
     கூட்டத்துக்கு மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமை வகித்தார். பேரவை நிறுவனர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்டத் தலைவர் எஸ்.கே.வைத்தி, வாசன் பேரவைத் தலைவர் தில்லை கோ.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     இளைஞரணி அமைப்பாளர் கே.ரஜினிகாந்த் வரவேற்றார். முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் முகமதுஜியாவுதீன், ஜி.ஆறுமுகம், ஆபீத்உசேன், ஆர்.வி.சின்ராஜ், ஆட்டோ குமார், ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     பாபு ஆர்.எஸ்.சந்திரசேகர் நன்றி கூறினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai