Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்த நாள் விழா: அரசியல் கட்சியினர் மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கர் பிறந்த நாள் விழா: அரசியல் கட்சியினர் மரியாதை

    By கடலூர்/சிதம்பரம்/நெய்வேலி/விருத்தாசலம்  |   Published on : 15th April 2016 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கடலூர் தலைமைத் தபால் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர்சிலைக்கு அதிமுக சார்பில் அமைச்சர் எம்.சி.சம்பத் மாலை அணிவித்தார். மாவட்ட அவைத் தலைவர் கோ.அய்யப்பன், துணைச் செயலர் முருகுமணி, தொழிற்சங்கச் செயலர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், ஒன்றியச் செயலர் ராம.பழனிச்சாமி, நகரச் செயலர் ஆர்.குமரன், மருத்துவரணி மாநில நிர்வாகி சீனுவாசராஜா, நகர்மன்ற துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், கடலூர் நகர கூட்டுறவு சங்கத் தலைவர் தி.ரவிச்சந்திரன், கவுன்சிலர் வ.கந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்களவை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செய்தித் தொடர்பாளர் பால.புதியவன், நிர்வாகி பெ.பாவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     மக்கள் நலக் கூட்டணி சார்பில் மதிமுக மாவட்டச் செயலர் ஜெ.ராமலிங்கம் தலைமையில் கூட்டணியினர் ஊர்வலமாகச் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலர் வி.குளோப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், செயலர் என்.காசிநாதன் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

     தமாகா சார்பில் மாநிலச் செயலர் ஏ.எஸ்.சந்திரேசகரன் தலைமையிலும், பாஜக சார்பில் மாநிலச் செயலர் சு.ஆதவன் தலைமையிலும் மரியாதை செலுத்தினர். இதில், வேட்பாளர்கள் துறைமுகம் செல்வம், சரவணன், அமைப்புச் செயலர் ஆர்.பி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     இந்திய குடியரசு கட்சி சார்பில் மாவட்ட துணைத் தலைவர் கே.ஜெயமணி தலைமையிலும், பகுஜன் சமாஜ் சார்பில் மாநில இளைஞரணி செயலர் ஆர்.சுரேஷ் தலைமையிலும், தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அலுவலர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் கு.பரமேஸ்வரன் தலைமையிலும் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    கடலூர் வில்வநகர் பகுதியினர் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சிதம்பரம்: சிதம்பரம் வடக்கு மெயின்ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் ஏ.அருண்மொழிதேவன் எம்.பி., அதிமுக வேட்பாளர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

     நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட முன்னாள் செயலர் வி.கே.மாரிமுத்து, நகரச் செயலர் ஆர்.செந்தில்குமார், முன்னாள் எம்.பி., ஏ.முருகேசன், மாவட்ட இலக்கிய அணிச் செயலர் சொ.ஜவகர், நகர பேரவைச் செயலர் டேங்க் ஆர்.சண்முகம், தொகுதி இணைச் செயலர் சி.கே.சுரேஷ்பாபு, பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் கே.அசோகன், துணைத் தலைவர் க.திருமாறன், நகர அவைத் தலைவர் தில்லை சேகர், துணைச் செயலர் சாமிநாதன், பொருளர் மருதவாணன், இளநாங்கூர் கருணா, தலைமைக் கழகப் பேச்சாளர்கள் தில்லை கோபி, தில்லை செல்வம், நகர எம்ஜிஆர் மன்றச் செயலர் பாரி, மாவட்டப் பிரதிநிதிகள் குமார், நாகராஜன், முத்துராமன், நகர எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் ராஜா, மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு பொருளர் ஆர்.வி.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     இதேபோல், சிதம்பரத்தில் மக்கள் நலக் கூட்டணியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடினர். அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதர் சங்க மாநிலத் தலைவி பி.ஜான்சிராணி மாலை அணிவித்து கேக் வெட்டினார். நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பால.அறவாழி, நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, நெடுமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகரச் செயலர் ஆர்.ராமச்சந்திரன், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, கீரப்பாளையம் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நெய்வேலி: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, பண்ருட்டியில்

    உள்ள அவரது சிலைக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யா பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளர் வ.ஜானகிராமன், நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம், தொகுதிச் செயலர் ராமசாமி, அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் என்.டி.கந்தன், அவைத் தலைவர் ராஜதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நல்லூர் காந்தி நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, நல்லூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலர் டி.எம்.பச்சமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவைத் தலைவர் துரைசாமி, ஊராட்சித் தலைவர் கருப்பையா, அத்மா குழுத் தலைவர் அருள்தாஸ், ஊராட்சி செயலர் சுப்பிரமணியன், கிளைச் செயலர் பழனிச்சாமி, சம்பத், கவுன்சிலர் ராமசாமி, நகர் கிளைச் செயலர் பழனிச்சாமி, காந்தி நகர் கிளைச் செயலர் முருகையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai