Enable Javscript for better performance
அரசுப் பேருந்தில் ரூ.1.10 லட்சம் கவரிங் நகைகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்தில் ரூ.1.10 லட்சம் கவரிங் நகைகள் பறிமுதல்

    By சிதம்பரம்  |   Published on : 15th April 2016 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அருகே அரசுப் பேருந்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.10 லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    சிதம்பரம் அருகே தீத்தாம்பாளையம் குறுக்கு சாலைப் பகுதியில் பரங்கிப்பேட்டை புள்ளியியல் ஆய்வாளரும், தேர்தல் அதிகாரியுமான சிவக்குமார் தலைமையிலான பறக்கும்படையினர் புதன்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வேலூரிலிருந்து நாகப்பட்டினம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

     அந்தப் பேருந்தில் பயணம் செய்த சிதம்பரம் பள்ளிப்படை இந்திரா நகரைச் சேர்ந்த ஜோதிராமலிங்கம் (40) என்பவர், போதிய ஆவணமின்றி 800 கவரிங் நகைகள், 115 கவரிங் மோதிரம், தாலிக்காசு 300 ஆகியவற்றை கொண்டுசென்றது தெரியவந்ததாம். இதையடுத்து அந்த நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai