Enable Javscript for better performance
கூட்டணிக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி; தி.மு.க.வினர் விரக்தி- Dinamani

சுடச்சுட

    

    கூட்டணிக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி; தி.மு.க.வினர் விரக்தி

    By நெய்வேலி  |   Published on : 15th April 2016 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் திமுகவினர் விரக்தி அடைந்துள்ளனர்.

    பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அக்கட்சியின் அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் வி.கே.வெங்கட்ராமனும், பண்ருட்டியைச் சேர்ந்த ஆனந்தி சரவணனும் வாய்ப்பு கேட்டிருந்தனர். இவர்கள் இருவரும் திமுக மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களாவர்.

    இவர்களில் ஒருவருக்கு வாய்ப்புக் கொடுத்து, மற்றவரை கைவிட முடியாத சூழலால், பண்ருட்டி தொகுதி திமுக கூட்டணியில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அக்கட்சியின் தலைவர் பொன்.குமார் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    தொகுதிக்கே சம்பந்தமில்லாத ஒருவர் இங்கு போட்டியிடுவதால், திமுக தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai