Enable Javscript for better performance
சூடுபிடிக்கும் கொடுக்காபுளி வியாபாரம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் கொடுக்காபுளி வியாபாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.

    முன்னொரு காலத்தில், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் கரையோரங்களில் கொடுக்காபுளி மரங்களை அதிகமாகக் காண முடியும். அந்த மரங்களில் காய்த்து தொங்கும் சுருள் வடிவப் பழங்கள் நமது கண்களைக் கவரும். தற்போது, கொடுக்காப்புளி மரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு விட்டதால் இந்த பழங்களை பார்ப்பதே அரிதாக உள்ளது.

     இந்த நிலையில், கடலூர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் தள்ளு வண்டிகளில் இப்பழங்களை தற்போது வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஆந்திரம் மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படும்  கொடுக்காபுளி பழங்கள் கிலோ ரூ.160க்கு விற்பனையாகிறது.

    இந்தப் பழம் வயிற்றுப் புண்ணுக்கு (அல்சர்) சிறந்த மருந்தாகக் கருதப்படுவதோடு, புரோட்டீன் சத்தும் அதிகம் கொண்டதாகும்.

     மேலும், வெயில் காலத்தில் இப்பழங்களை சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணியும் என்றும் நம்பப்படுகிறது. இதனால், பொதுமக்கள் இப்பழங்களை அதிக அளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai