Enable Javscript for better performance
ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

    By நெய்வேலி  |   Published on : 15th April 2016 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் ஆண்டு பேரவைக் கூட்டம் இந்திரா நகரில் அண்மையில் நடைபெற்றது.

    ஏஐடியூசி கடலூர் மாவட்ட பொதுச் செயலர் எம்.சேகர் தலைமை வகித்தார். கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28ஆம் தேதி சென்னை, சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவது, மே 1இல் நெய்வேலி மத்தியப் பேருந்து நிலையம் எதிரே வேலைநிறுத்த விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது என  தீர்மானித்தனர்.  கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்புத் தலைவராக ராமமூர்த்தி, சிறப்புச் செயலர் எம்.சேகர், தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச் செயலர் செல்வமணி, பொருளர் கல்யாணசுந்தரம், பிரசார செயலர் முனியன், அலுவலகச் செயலர் திருஞானம், துணைத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 21 நிர்வாகிகள், 48 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai