Enable Javscript for better performance
டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு- Dinamani

சுடச்சுட

    

    தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் டாஸ்மாக் கடைகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.சுரேஷ்குமார்  தலைமையில் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பார்கள் மூலம் ஒரே நேரத்தில் கணிசமான விற்பனை இருந்தால் அதை கண்காணிக்க வேண்டும்.

    பார்களில் தங்கியிருப்பவர்களின் ஒட்டு மொத்தமாக வாங்கும் நிலையையும் கண்காணிக்க வேண்டும். மது வகைகள் கடத்துவது முற்றிலும் தடுக்கப்பட்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    மாவட்டத்தில் முறையற்ற பார்கள் நடத்துவோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பார்களில் கூப்பனுக்கு மதுபாட்டில்கள் வழங்கக்கூடாது.  இரவு 10 மணிக்கு மேல் திறந்திருக்கக்கூடாது உள்ளிட்ட நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் உதவி ஆணையர் (கலால்) முத்துக்குமாரசாமி, டாஸ்மாக் மேலாளர்  மணிவன்னன் மற்றும் காவல் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai