Enable Javscript for better performance
திரையரங்குகளில் கூடுதல் கட்டணம்  வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    திரையரங்குகளில் கூடுதல் கட்டணம்  வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்

    By கடலூர்  |   Published on : 15th April 2016 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் திரையரங்குகளில், அரசு நிர்ணயம் செய்த பார்வையாளர் அனுமதி கட்டணத் தொகையை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்திடும் திரையரங்குகளை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

     அதன்படி, கடலூர் கோட்டத்துக்கு உள்பட்ட திரையரங்குகள் தொடர்பான புகார்களுக்கு கடலூர் கோட்டாட்சியரை 9445000426 என்ற எண்ணிலும், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கடலூர் - 94981 05200, பண்ருட்டி - 94437 81474, நெய்வேலி - 94981 54800, வணிகவரி உதவி ஆணையர் கடலூர் நகரம் - 80566 13972, புறநகர் - 94430 38601, பண்ருட்டி நகரம் - 99429 38282, புறநகர் - 89039 80021 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    சிதம்பரம் கோட்டம்: கோட்டாட்சியரை 94450 00425, காவல் துணைக் கண்காணிப்பாளர் சிதம்பரம் - 94435 62856, சேத்தியாத்தோப்பு 94981 45347, வணிகவரி அலுவலர் சிதம்பரம்- 94428 33421, 97913 71665 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    விருத்தாசலம் கோட்டம்:கோட்டாட்சியரை 94450 00427, காவல் துணைக் கண்காணிப்பாளர் விருத்தாசலம்- 94981 51610, திட்டக்குடி- 94868 37444, விருத்தாசலம் வணிகவரி உதவி ஆணையரை 99429 38282 ஆகிய எண்களில் பொதுமக்கள் அனைத்து நாள்களிலும் தொடர்பு கொள்ளலாம்.   பெறப்படும் புகார்கள் குறித்து 24 மணி நேரத்துக்குள் தொடர்புடைய திரையரங்குகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து ஆய்வு அறிக்கையினை அனுப்பிடுமாறு கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

     மேலும், இதுதொடர்பான புகார்களை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கான 04142- 230655 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai