Enable Javscript for better performance
தீ விபத்துகளில் உயிரிழந்த சிஐஎஸ்எப் தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    தீ விபத்துகளில் உயிரிழந்த சிஐஎஸ்எப் தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

    By நெய்வேலி  |   Published on : 15th April 2016 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீ விபத்துகளில் உயிரிழந்த சிஐஎஸ்எப் (மத்திய தொழிலகப் பாதுகாப்பு) தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நெய்வேலி முதலாவது அனல்மின் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    நெய்வேலி என்எல்சி சிஐஎஸ்எப் யூனிட் சார்பில், தீயணைப்பு வார விழா வியாழக்கிழமை தொடங்கி, 20ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த தீ விபத்துகளில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    என்எல்சி சிஐஎஸ்எப் யூனிட் பிரிவு சீனியர் கமாண்டர் சின்ஹா உத்தரவின் பேரில், துணைக் கமாண்டர் முகமது அனிப் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தீயணைப்புப் பிரிவு உதவி கமாண்டர் நரேந்தர் முன்னிலை வகித்தார். அனல் மின் நிலைய துணைப் பொதுமேலாளர் குமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உயிரிழந்த வீர்களின் நினைவு சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

     நிகழ்ச்சியில், சொக்கலிங்கம், சேட்டன் மர்டாலியா, சந்திரசேகர், ஆர்யா, என்எல்சி அனல்மின் நிலைய பாதுகாப்பு அதிகாரி ரகுநாதன், தீயணைப்பு ஆய்வாளர்கள் மோகன், துர்காபிரசாத், உளவுப் பிரிவு ஆய்வாளர் வசந்தன் செபாஸ்டியன், அனில்குமார், சரவணன், இளையராஜா, ராஜேந்திரன், ஏ.கே.சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்: நாடு முழுவதும் தீ மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு, கடலூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அலுவலர் (பொறுப்பு) ஏழுமலை தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், ரங்கராஜ், முத்துலிங்கம் ஆகிய தீயணைப்பு வீரர்கள் மறைவுக்கும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

     நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற கோட்ட அலுவலர் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூர் கோட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் ஒரு வாரம் தீ தொண்டுநாள் அனுசரிக்கப்பட்டு சொற்பொழிவுகள், பிரசாரங்கள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai