Enable Javscript for better performance
நாளை மக்கள் நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஏப்.16) நடைபெற உள்ளது.

    இதுகுறித்து கடலூர் தொலைதொடர்பு மாவட்ட முதுநிலை மேலாளர் எஸ்.லீலாசங்கரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிஎஸ்என்எல் தொலைபேசியை பயன்படுத்தி, கட்டண பாக்கி வைத்துள்ள கடலூர் பகுதி வாடிக்கையாளர்கள் சமரச அடிப்படையில் நிலுவைக் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக கடலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மக்கள் நீதிமன்றம் ஏப்.16ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

     கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள, கட்டண பாக்கி வைத்துள்ளவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடிதம் பெறாதவர்கள் விசாரணைக்கு முன்பாக பணம் செலுத்தினால் நீதிமன்றத்துக்கு வருவதை தவிர்க்கலாம். அல்லது மக்கள் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்று நிலுவைத் தொகையை சமரச அடிப்படையில் செலுத்தலாம்.

     எனவே, பாக்கி வைத்துள்ளவர்கள் மீது நிலுவைத் தொகையினை வசூலிக்கும் பொருட்டு வழக்குத் தொடர்வதை தடுக்க இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai