Enable Javscript for better performance
நெய்வேலியில் களம் காணும் ஒரே கிராம வேட்பாளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்டம், நெய்வேலி தொகுதியில் அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சட்டப்பேரவைத் தேர்தலில் நெய்வேலி தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக பண்ருட்டி வட்டம், சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரா.ராஜசேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் இதே கிராமத்தைச் சேர்ந்த சபா.ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இவர்கள் இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், ஒரே சமூகத்தைச் சேர்ந்த உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அதிமுக வேட்பாளர் ராஜசேகர் முதல் முறையாக தேர்தல் களம் காணுகிறார். இவரது சகோதரர் சொரத்தூர் ரா.ராஜேந்திரன் குறிஞ்சிப்பாடி தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ஆவார். இவர் மீண்டும் அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். சபா.ராஜேந்திரன் நெல்லிக்குப்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 2011 பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai