Enable Javscript for better performance
பதஞ்சலீஸ்வரர் மீது படர்ந்த சூரிய ஒளி- Dinamani

சுடச்சுட

    

    கால்நாட்டாம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள சுவாமி மீது படர்ந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    காட்டுமன்னார்கோவில் அருகே கால்நாட்டாம்புலியூர் கிராமத்தில் அம்புசாஷி அம்பிகா சமேத ஸ்ரீபதஞ்சலீஸ்வரர் கோயில் உள்ளது.

    இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தின் முதல்நாளில், கோயிலின் கர்ப்பகிரகத்தில் உள்ள ஸ்ரீபதஞ்சலீஸ்வர் மீது சூரியக் கதிர்கள் படுவது வழக்கம். இந்த ஆண்டும் சித்திரை முதல் நாளான வியாழக்கிழமை சூரியக்கதிர் பதஞ்சலீஸ்வரர் மீது படர்ந்தது. இக்காட்சியை திரளான மக்கள் கண்டு தரிசித்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai