Enable Javscript for better performance
மாட்டுவண்டி மணல் குவாரியை மீண்டும் இயக்க சிஐடியூ வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மாட்டுவண்டி மணல் குவாரியை மீண்டும் இயக்க சிஐடியூ வலியுறுத்தல்

    By கடலூர்  |   Published on : 15th April 2016 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை மீண்டும் இயக்க வேண்டுமென சிஐடியூ வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலர் பி.கருப்பையன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் அருகே ஓட்டேரி பகுதியில் பொதுப்பணித் துறையின் மூலம் நேரடியாக ஊழியர்களை வைத்து அனுமதி சீட்டு கொடுத்து மணல் குவாரி இயங்கி வந்தது. இந்த குவாரிக்காக சிஐடியூ மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

    இதையடுத்து பசுமைத் தீர்ப்பாயம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததன் பேரில், மாவட்ட நிர்வாகம் மூலமாக குவாரி செயல்பட்டு வந்தது.  கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மணல் குவாரியை நிறுத்தி வைத்தனர்.

    தற்போது ஆற்றில் மழைநீர் வடிந்தும் மணல் அள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.

    ஆற்றில் முன்பை விட அதிகமாக மணல் உள்ளது.

     இதுகுறித்து கடந்த 2 மாதங்களாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், மாட்டுவண்டித் தொழிலாளர்களால் தங்களது மாடுகளுக்கு தீவனம் வழங்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அரசு அனுமதித்துள்ள ஓட்டேரியில் மீண்டும் மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை இயக்க வேண்டும் என்று அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai